சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தலைவர் இலங்கை வருகை
சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த உமர் கிரெம்லீவ் இலங்கையை வந்தடைந்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இங்கு வந்துள்ளார்.
சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் உமர் கிரெம்லீவ் மற்றும் அவரது மனைவி உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன், 1988 சியோல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ரோய் ஜோன்ஸ் ஜூனியர் மற்றும் ஜெர்மனியின் தற்போதைய ஃப்ளைவெயிட் குத்துச்சண்டை சாம்பியன்இ சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் இயக்குனர்இ இலங்கை அமெச்சூர் குத்துச்சண்டை சங்கத்தின் தலைவர் டயான் கோம்ஸ் ஆகியோரும் வந்துள்ளனர்.
உமர் கிரெம்ளினுக்கு சொந்தமான தனியார் ஜெட் விமானத்தில் தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறத.
இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தின் அதிகாரிகள் குழு மற்றும் இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் குழுவை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலைய விசேட விருந்தினர் அறைக்கு வந்தனர்.