கெஹலியவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
#SriLanka
#Health
Mayoorikka
2 years ago
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது,
இது இந்த வாரம் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் சகல பாராளுமன்ற கட்சிகளினதும் ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் உதவி செயலாளர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த பிரேரணைக்கு கூட்டு ஆதரவை திரட்டுவதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் ஈடுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றதாகவும் தெரிவித்தார்.