யாழ்ப்பாணம் பாடசாலை ஒன்றில் ஒன்பது வயது சிறுமியை தாக்கிய அதிபர் கைது

#SriLanka #Jaffna #Arrest #Principal
Prathees
2 years ago
யாழ்ப்பாணம் பாடசாலை ஒன்றில் ஒன்பது வயது சிறுமியை தாக்கிய அதிபர் கைது

யாழ்.தீவக பிராந்திய கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பாடசாலை ஒன்றில் ஒன்பது வயது சிறுமியை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் பாடசாலை அதிபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸாரால் அதிபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 இத்தாக்குதல் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 கடந்த 13ஆம் திகதி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை பெற்றோரால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாணம் மனித உரிமை அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 சந்தேகத்திற்குரிய அதிபர் யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கைட்ஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!