இரண்டு மகள்களை நினைத்து வேதனையில் இருக்கும் இயக்குனர் ஷங்கர்:காரணம் என்ன?

#Cinema #TamilCinema #Director #Lanka4
Kanimoli
2 years ago
இரண்டு மகள்களை நினைத்து வேதனையில் இருக்கும் இயக்குனர் ஷங்கர்:காரணம் என்ன?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இப்போது இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இப்போது வரை இழுத்தடித்துக் கொண்டு வருகிறது. இந்த சூழலில் ஷங்கர் தனது மகள்களை நினைத்து கண்ணீர் வடிப்பதாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

 அதாவது ஒருவர் எதை விதைக்கிறாரோ அதை தான் அறுவடை செய்தாக வேண்டும். அதாவது ஷங்கரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் தயாரிப்பாளர் குஞ்சு மோனனிடம் கேட்டால் தெரியும். ஏனென்றால் ஷங்கரை வைத்து அவர் தான் படங்களை தயாரித்து வந்தார். ஊசியாக இருந்தாலும் ஷங்கர் படத்தில் அது தங்க ஊசியாக தான் இருக்கும். அவருடைய படத்தில் கதையை முன்கூட்டியே சொல்ல மாட்டார். அதோடு மட்டுமல்லாமல் படத்தின் பட்ஜெட் ஒன்று சொன்னால் அதைவிட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக தான் படத்தை எடுத்து முடிப்பார். 

அப்படி இவர் செய்த பாவம் தான் அவரது மகள்களால் இப்போது பிரச்சனையை சந்தித்து வருகிறார். நிம்மதியாக ஒரு வாய் சோறு கூட அவரால் சாப்பிட முடியாத நிலையில் இருக்கிறார். அதாவது ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு 2000 கோடி சொத்து மதிப்பு உள்ள கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவருக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தார். கடைசியில் பல பெண்கள் மாப்பிள்ளை மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். இது கோர்ட், கேஸ் வரை சென்ற நிலையில் ரோகித்துடன் வாழ முடியாது என ஷங்கர் வீட்டுக்கே ஐஸ்வர்யா வந்துவிட்டார். 

மேலும் இரண்டாவது மகளை டாக்டருக்கு படிக்க வைத்து அழகு பார்த்தார். ஆனால் அதிதி ஷங்கர் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்று கூறிவிட்டார். சினிமாவில் உள்ள பிரபலம் தனது மகனை நடிகனாக வேண்டும் என்று ஆசைப்படுவார். ஒருபோதும் நடிகையாகக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். ஆனால் ஷங்கரின் பேச்சை மீறி அதிதி விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதைத்தொடர்ந்து இப்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார். இவ்வாறு ஐஸ்வர்யா மற்றும் அதிதி ஆகியோரை நினைத்து நிம்மதியாக சாப்பாடு, உறக்கம் இல்லாமல் ஷங்கர் கவலையில் உள்ளார் என பயில்வான் கூறியிருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!