போலி பீடி இலைகளால் ஆவியான 525 கோடி ரூபாய்

#SriLanka
Prathees
2 years ago
போலி பீடி இலைகளால் ஆவியான 525 கோடி ரூபாய்

பீடி மூடும் இலைகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்வதால் அரசாங்கத்திற்கு ஒரு வருடத்தில் 525 கோடி ரூபாவிற்கும் அதிகமான இழப்பு ஏற்படுவதாகவும், உடனடியாக ஜனாதிபதி தலையிட்டு பணத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அகில இலங்கை பீடி சுருட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் பீடி இலை புகையிலை இறக்குமதியாளர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்தியாவில் இருந்து பீடி போர்த்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பீடி இலைக்கு 6000 ரூபா செஸ் வரி அறவிடப்படுவதால், அதே இலைகள் ஒரு கிலோவுக்கு சுமார் 9500 ரூபாவாகும் என சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும், படகுகள் மூலம் கடத்தப்படும் ஒரு கிலோ தரம் குறைந்த டெண்டு இலைகளை 5700 ரூபாவிற்கு கறுப்புச் சந்தையில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், சட்டவிரோத இறக்குமதியை நிறுத்துவதற்கான முறைமை உருவாக்கப்பட வேண்டுமெனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

 பீடி உற்பத்தியாளர்கள் சட்டவிரோத டெண்டு இலைகளை சந்தையை கைப்பற்றி குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் முறையான பீடி உற்பத்தியாளர்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 பீடி இலைகள் மீதான கலால் வரியை நீக்கி, ஒரு பீடிக்கு ரூ.3.50 நேரடி வரியாக விதிக்க வேண்டும் என்று அரசுக்கு சங்கம் முன்மொழிகிறது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!