ஐரோப்பிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

ஐரோப்பாவில் வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள உயர்வு வெப்ப புயலாக மாறாலாம் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி வெப்ப புயலானது வட ஆப்பிரிக்காவிலிருந்து தெற்கு ஐரோப்பாவை நோக்கி நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆண்டிசைக்ளோன் - அதிக வளிமண்டல அழுத்தம் உள்ள பகுதியைச் சுற்றி பெரிய அளவிலான காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும், இது படிப்படியாக வெப்ப புயலாக மாறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இத்தாலியின் சில பகுதிகளில் அடுத்த வாரம் வெப்பநிலையானது 45C விட அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் பழங்கால வெப்ப பதிவுகள் உடைக்கப்படும் என எச்சரித்துள்ள வானிலை முன்னறிவிப்பாளர்கள், காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.



