மூடியொன்றை விழுங்கிய குழந்தை உயிரிழப்பு!

#SriLanka #Lanka4 #Died
Thamilini
2 years ago
மூடியொன்றை விழுங்கிய குழந்தை உயிரிழப்பு!

அக்குரஸ்ஸ - தலஹகம பிரதேசத்தில் சிறிய மூடியொன்று தொண்டையில் சிக்கிய நிலையில், குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. 

ஒரு வருடமும் 15 நாட்களும் ஆன குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. 

குறித்த குழந்தை தைலம் ஒன்றின் மூடியை வாயில் வைத்திருந்ததாகவும், தவறுதலாக விழுங்கிய நிலையில், அந்த மூடி தொண்டையில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. 

குறித்த சிறுமியின் அண்ணன் அந்த மூடியை எடுப்பதற்கு முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து குறித்த சிறுமியை வைத்தியசாலையில், அனுமதித்துள்ளனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!