வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் : ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்!
#SriLanka
#Vavuniya
#Lanka4
Thamilini
2 years ago
வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த நால்வரும் வவுனியா பொதுவைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று (15.07) இடம்பெற்ற இந்த மோதலில், செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இன அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனை அடிப்படையாகக் கொண்டு நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.