இந்திய விஜயத்துக்கு முன்னதாக ரணிலை சந்திக்கவிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#TNA
Kanimoli
2 years ago
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்
எதிர்வரும் செவ்வாய்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.