அதிக வெப்பநிலை காரணமாக இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில்

#weather #Italy #hot
Prathees
2 years ago
அதிக வெப்பநிலை காரணமாக இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 பிரதமர், கலிலி கடலுக்கு விடுமுறையில் சென்றிருந்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 அதிக வெப்பநிலை காரணமாக நீர்ச்சத்து குறைபாடு மற்றும் பல சிக்கல்கள் காரணமாக பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 இந்த நாட்களில் பிரதமர் தங்கியிருந்த கடற்கரையை சுற்றி 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எனினும் 73 வயதான இஸ்ரேல் பிரதமர் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 ஆனால் முன்னதாக அழைக்கப்பட்ட அமைச்சரவை கூட்டத்தையும் பிரதமரால் ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 மருத்துவமனையில் உள்ள பிரதமர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

 வெப்பமான காலநிலையைத் தாங்கும் வகையில், வெயிலில் வெளிப்படுவதைத் தவிர்க்கவும், ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் குடிக்கவும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!