தலதா பெரஹேராவுக்கு 13 மில்லியன் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும்: மின்சார சபை அறிவிப்பு

#SriLanka #Electricity Bill
Prathees
2 years ago
தலதா பெரஹேராவுக்கு 13 மில்லியன் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும்: மின்சார சபை அறிவிப்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவிற்கு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்குவதற்காக 13 மில்லியன் ரூபாவை வைப்பிலிடுமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

 கண்டி எசல பெரஹரே உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு மின்சார சபை இந்த அறிவித்தலை வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

 கடந்த காலங்களில் தலதா பெரஹராவுக்காக மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டதாகவும், அது அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்டதாகவும் கூறும் அவர், இம்முறை விடுக்கப்பட்ட கோரிக்கை முன் எப்போதும் இல்லாத ஒன்று என்றும் கூறுகிறார்.

 இதுபோன்ற கோரிக்கையை இதுவரை பார்த்ததில்லை என்றார். கண்டி எசல பெரஹெராவின் கப் நடும் விழா ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!