மத ஸ்தலங்களுக்கு சொந்தமான சொத்துக்களை தேட அமைச்சர் உத்தரவு

#SriLanka
Prathees
2 years ago
மத ஸ்தலங்களுக்கு சொந்தமான சொத்துக்களை தேட அமைச்சர் உத்தரவு

ஒவ்வொரு மத ஸ்தலத்தின் கீழும் உள்ள சொத்துக்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

 விகாரைகளின் கீழுள்ள சொத்துக்கள் தொடர்பில் பதிவுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 சமய ஸ்தலங்களை பதிவு செய்வதோடு அது தொடர்பான தகவல் சேகரிப்பும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கு எத்தனை ஆலயங்கள் இருக்க முடியும் என்பது தொடர்பில் எதிர்காலத்தில் அளவுகோல்கள் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

 மகா நா தேரர்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினருடன் கலந்தாலோசித்து அளவுகோல் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!