இலங்கையில் பெற்றோல் உற்பத்தி செய்ய நடவடிக்கை!
#SriLanka
#Lanka4
#petrol
Thamilini
2 years ago
இலங்கையில் பெற்றோல் உள்ளிட்ட மசகு எண்ணெய்களை உற்பத்தி செய்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92, 95 வகைகளைச் சேர்ந்த பெற்றோல் உட்பட மசகு எண்ணெயை உற்பத்தி செய்து விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இதற்கான ஒப்பந்தம் சீனாவின் சைனோ பெக் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தி்ன் மேற்பார்வையுடன் எதிர்வரும் 20 வருடங்களுக்கு இலங்கையின் பெற்றோலிய உற்பத்தித்துறை தொடர்பான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.