மின்சார உப நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக பல இடங்களில் நீர் வெட்டு
#SriLanka
#Lanka4
#waterfowl
Kanimoli
2 years ago
இன்று (16) காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
சபுகஸ்கந்த மின்சார உப நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகம் இன்று எட்டரை மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டமையால் இந்த நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபையின் ஒரு பகுதிக்கு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபை மேலும் வலியுறுத்தியுள்ளது.