ரஷ்யாவில் அடிமைகளாக சிக்கியுள்ள பெருமளவான இலங்கையர்கள்!
ரஷ்யாவில் சுமார் 500 இலங்கையர்கள் அடிமைகளாக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் சிக்குண்டவர்களே இவ்வாறு அடிமைகளாக அங்கு தொழில்புரிந்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு நிறுவனங்களின் ஊடாக ரஷ்யாவின் பெருநகரங்களில் தொழில்வாய்பை பெற்றுக்கொள்வதற்காக சென்ற இலங்கையர்கள், வாக்குறுதியளித்தப்படி அங்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியாமல் பன்றிப்பண்ணைகளில் அடிமைகளாக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சிக்குண்டவர்களின் கடவுச்சீட்டுகளும் தொழில் வழங்குநர்கள் வசம் சிக்குண்டுள்ளதால், அங்கிருந்து வெளியேற முடியாத இக்கட்டான சூழ்நிலையில், அவர்கள் மாட்டிக்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.
இருப்பினும் இவ்வாறாக அங்கு சிக்குண்டவர்கள் குறித்து இலங்கை அரசாங்கம் அசமந்தபோக்குடன் நடத்துகொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.