கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கும்பலின் தலைவன் கைது!
ஆயுதங்களை காட்டி பிரதேசவாசிகளை பயமுறுத்தி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த சந்தேக நபர் ஒருவரை ஊர்பொக்க பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி ஊருபொக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹீகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிற்கு வந்த சிலர் துப்பாக்கிகளை காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் வந்த கார், பணம் மற்றும் தங்கப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த நால்வரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குற்றச்செயலுக்கு தலைமை தாங்கிய ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரை இன்று (16.07) மொரவக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்துடன் இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.