தென்கொரியாவில் கனமழையில் சிக்கி 7க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

#SouthKorea #HeavyRain #Rescue
Prasu
2 years ago
தென்கொரியாவில் கனமழையில் சிக்கி 7க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

தென்கொரியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்கு பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 

அங்குள்ள நோன்சான், யோங்ஜூ ஆகிய பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து 4 பேர் செத்தனர். அதேபோல் செஜோங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!