மோடிக்காக ஐக்கிய அரபு அமீரகதில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட உணவு பட்டியல்

பிரான்ஸ் நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இன்று சென்றுள்ளார். பிரதமர் மோடி அபுதாபி நகரை சென்றடைந்ததும், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புர்ஜ் கலிபா என்ற உயர்ந்த கட்டிடத்தில் இந்திய தேசிய கொடியின் வர்ணம் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர் அபுதாபி நகரில், இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜாயத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நஹ்யான் விருந்தளித்து உபசரித்து உள்ளார். அபுதாபியில் உள்ள காசர்-அல்-வதன் என்ற அதிபருக்கான அரண்மனையில் இந்து விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த உணவு மெனு அடங்கிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், திருவிழா போன்ற காலங்களில் வழங்கப்படும் ஹரீஸ் எனப்படும் கோதுமையில் செய்த டிஷ் மற்றும் பேரீச்சம் பழத்தில் செய்த சாலட் மற்றும் உள்ளூரில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை கொண்டு தயாரான சாலட், மசாலா சாஸில் பொறிக்கப்பட்ட காய்கறிகள் ஆகியன முக்கிய உணவுக்கு முன் வழங்கப்படும் முன் உணவுகளாக பரிமாறப்பட்டன.
அதன்பின் முக்கிய உணவாக, கருப்பு உளுந்து மற்றும் கோதுமையில் தயாரான உணவில் காலிபிளவர் மற்றும் கேரட் தந்தூரி ஆகியவை சேர்த்து பரிமாறப்பட்டன.
அதன்பின் உள்ளூரில் பருவகாலங்களில் கிடைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்களை கொண்டு செய்யப்பட்ட பாயாசமும் விருந்தில் பரிமாறப்பட்டது. பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட அனைத்து உணவுகளும் சைவ உணவு மற்றும் எண்ணெயில் தயாரிக்கப்பட்டவை.
அவற்றில் பால் அல்லது முட்டை பொருட்கள் எதுவும் இல்லை என்று அதற்கான மெனு அட்டையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.



