மலையின் அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட டென்மார்க் அழகியின் உடல்

#SriLanka #Death
Prathees
2 years ago
மலையின் அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட டென்மார்க்  அழகியின் உடல்

கடுகன்னாவ பிரதேசத்தில் மலையேறுவதாக கூறி 5 நாட்களாக காணாமல் போயிருந்த 32 வயதுடைய அழகான டென்மார்க் பெண்ணின் சடலம் நேற்று (14) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கண்டி சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.

 Munk Ebbsen என்ற டென்மார்க் பெண் உயிரிழந்துள்ளார். கண்டி அம்பிட்டிய வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு கடந்த 9ஆம் திகதி வந்துள்ளார். 

கடந்த 10ஆம் திகதி கடுகண்ணாவ மலையில் ஏறப் போவதாக ஹோட்டல் உரிமையாளரிடம் கூறியிருந்தார். ஹோட்டலில் இருந்து வெளியேறிய டென்மார்க் பெண் திரும்பி வராததால் ஹோட்டலின் உரிமையாளர் கண்டி சுற்றுலா விடுதியில் முறைப்பாடு செய்துள்ளார்.

 ஹோட்டல் உரிமையாளரின் முறைப்பாட்டின் பிரகாரம், அவர் கடுகன்னாவ, அலகல்ல மலையில் ஏறியிருக்கலாம் என கண்டி சுற்றுலா பொலிஸார் ஊகித்துள்ளனர்.

 பின்னர், மலையேறுவதற்கு வழிகாட்டும் இளைஞர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து போலீசார் நடத்திய தேடுதலின் போது இந்த டேனிஷ் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

 இந்த டென்மார்க் பெண் பொத்தபிட்டிய பிரதேசத்தில் இருந்து அலகல்ல மலையில் ஏறியிருக்கலாம் எனவும், மலை உச்சியில் உள்ள சிங்க கல (ருடன கல) மீது ஏற சென்ற போது தவறி விழுந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 பொத்தபிட்டிய அலகல்ல மலையடிவாரத்தில் சடலம் காணப்பட்டதால் மலையில் ஏறும் போது ருதனகல நோக்கி சென்று அங்கிருந்து தவறி விழுந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

 இந்த வெளிநாட்டுப் பெண் காணாமல் போனதாகக் கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் உத்தியோகபூர்வ நாய்களை அனுப்பி இராணுவத்தின் ஆதரவுடன் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

 எனினும் பெண்ணின் மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனையின் போது தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 டேனிஷ் பெண்ணின் இரு கால்களிலும் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர். இந்த சடலத்தை பார்த்ததும், இதுபற்றி கேள்விப்பட்டு ஏராளமானோர் அப்பகுதிக்கு வந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

 உயிரிழந்த பெண்ணின் முதற்கட்ட நீதவான் பரிசோதனையும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

 மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க மற்றும் கண்டி/மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த திஸாநாயக்க ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், அதிகாரிகள் குழு மற்றும் கண்டி சுற்றுலாப் பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!