ஆறு மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்த ரயில்!

#SriLanka #Colombo #Jaffna #Train
Prathees
2 years ago
ஆறு மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்த ரயில்!

வடக்கு புகையிரத புனரமைப்பின் 06 மாதங்களின் பின்னர் பயணிகளுக்கான கொழும்பு யாழ்ப்பாண புகையிரதப் பயணங்கள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக அனுராதபுரத்திலிருந்து ஓமந்த புகையிரத நிலையம் வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் காரணமாக கடந்த ஜனவரி 05 ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. 

 அதன்படி 6 மாதங்களின் பின்னர் இன்று முதல் மீண்டும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கும் மக்கள் பயணிக்க முடியும்.

 இதனிடையே அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை சோதனை ரயில் இயக்கப்பட்டு, ரயில் பயண சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

 மஹாவயில் இருந்து ஓமந்தை வரையிலான 128 கி.மீ புகையிரத பாதையின் புனரமைப்பு இந்தியாவில் IRCONE நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, 

முதற்கட்டமாக அனுராதபுரத்திலிருந்து ஓமந்த புகையிரத நிலையம் வரையான புனரமைப்பு 91.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் மேற்கொள்ளப்பட்டது.பயணிகள் அதிவேகத்தில் ரயிலில் பயணிக்க இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!