அநுராதபுரம்-ஓமந்தை ரயில் பாதையில் பழைய தண்டவாளங்கள் திருட்டு
#SriLanka
#Railway
Mugunthan Mugunthan
2 years ago
அநுராதபுரம் - ஓமந்தை ரயில் பாதையில் புனரமைப்பின் போது நீக்கப்பட்ட தண்டவாளங்களை சிலர் திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் ராணி ரயிலுடன் இவ்வாறு திருடிச் சென்ற நபர்கள் மோதியதையடுத்து இக்கொள்ளைச்சம்பவம் அம்பலத்திற்கு வந்தது. சம்பவ இடத்தில் இவர்கள் தண்டவாளத்தை வெட்ட பயன்படுத்திய எரிவாயு சிலிண்டர் மற்றும் எரிவாயு கட்டர் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அத்தியட்சகர் தெரிவித்தார்.
மேலும் இவர்களில் சிலர் தப்பியோடிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகள் அநுராதபுரம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.