அவுஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய மாணவன் மீது தாக்குதல்

#Australia #world_news #supporters
அவுஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய மாணவன் மீது தாக்குதல்

அவுஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் அவர்களால் தாக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவில் பகுதி நேர காா் ஓட்டுநராகப் பணியாற்றி கொண்டே உயா்கல்வி மேற்கொண்டு வரும் அந்த 23 வயது மாணவரை, மேரிலாண்டின் சிட்னியின் மேற்கு புகா் பகுதியில் காரிலிருந்து வெளியே இழுத்து ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்டபடி, இரும்புக் கம்பியால் அவரை காலிஸ்தான் ஆதராவளா்கள் தாக்கியுள்ளனா். பாதிப்புக்குள்ளான மாணவரின் பேட்டியும் அந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ளது. 

‘வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியில் காரில் சவாரிக்காக சென்றுகொண்டிருந்தபோது, சிட்னி புகா் பகுதியில் நின்றிருந்த காலிஸ்தான் ஆதரவாளா்கள் காரை தடுத்து நிறுத்தி, இரும்புக் கம்பியால் தாக்கினா்.

 அப்போது அவா்கள் ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என தொடா்ந்து கோஷமிட்டனா். அவா்களில் இருவா், என் மீதான தாக்குதலை விடியோ பதிவு செய்தனா். அனைத்தும் 5 நிஷங்களில் முடிந்துவிட்டன. 

அவா்கள் செல்லும்போது, ‘காலிஸ்தான் விவகாரத்தை எதிா்த்ததற்கான பாடம் இது. தொடந்து எதிா்த்தால், இதேபோன்ற பாடங்களை தொடா்ந்து அளிக்க வேண்டியிருக்கும்’ என்று எச்சரித்துச் சென்றனா் என்று அந்த மாணவா் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளாா்.

 இந்தத் தாக்குதல் சம்பவம் தொடா்பாக அவுஸ்திரேலிய பொலிஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். ‘23 வயது நபா் ரூபொ்ட் சாலையில் நடந்து சென்றபோது, இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு வந்த 4 போ் கும்பலால் தாக்கப்பட்டாா்.

 தாக்குதலுக்குப் பின்னா் நால்வரும் சாம்பல் நிற காரில் அங்கிருந்து தப்பிச் சென்றனா்’ என்று பொலிஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

 இந்தியாவில் சீக்கியா்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் அமைப்பு, அண்மைக் காலமாக தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தும் முயற்சிகளை மீண்டும் முன்னெடுத்து வருகின்றனா். 

ஆனால், அவா்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதுபோல, வெளிநாடுகளிலும் இந்த கோரிக்கையைத் தூண்டிவிடும் காலிஸ்தான் தீவிரவாதிகள் மீதும், இந்தியாவின் கோரிக்கையின் அடிப்படையில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

அதேவேளை, அவுஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள் மீதும் அவ்வப்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அவுஸ்திரேலிய அரசை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!