மரவள்ளிக் கிழங்கின் நன்மைகள்!
#India
#Healthy
#World_Health_Organization
#Tamilnews
Mani
2 years ago

இந்தியாவில் பிரதான உணவாக உட்கொள்ளப்படும் மரவள்ளிக்கிழங்கு, வேகவைக்கும்போது சுவையானது மற்றும் நமது உடலின் வலிமையை அதிகரிக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.
மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது.
மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லா வகை சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம்.
ஞாபக மறதி வியாதியை குணப்படுத்தும். உடலில் நீரின் அளவை சரியாக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை
மாற்றத்தை சீராக்கும்.
ரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது.



