சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜை கைது!
#SriLanka
#Batticaloa
#Lanka4
Thamilini
2 years ago
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் இன்று (15.07) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பன் செல்வதுரை என்ற நபர் நண்பர் ஒருவருடன் மட்டகளப்பில் தங்கியிருந்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நிலையில், மட்டகளப்பு பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணை செய்துள்ளனர்.
இதன்போது, குறித்த நபர் சட்டவிரோதமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரை கைது செய்துள்ள பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.