தான்சானியாவில் லாரி மீது மினி பஸ் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
#Death
#Accident
#world_news
#Bus
Mani
2 years ago
ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் கஹாமா பகுதியில் இருந்து நயகனாசிக்கு நோக்கி மினி பஸ் சென்று கொண்டிருந்தது. இருப்பினும், கெய்ட்டா பகுதி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை மினி பஸ் இழந்தது.
இதனால், எதிரே வந்த லாரி மீது மினி பஸ் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.