மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள போர்ட் சிட்டியின் செயற்கை கடற்கரை!
#SriLanka
Prathees
2 years ago
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை இன்று (15) திறந்து வைக்கப்பட்டது.
இன்று முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, செயற்கைக் கடற்கரையில் நீந்தலாம், நீர் விளையாட்டு விளையாடலாம். இந்த கடற்கரை சுமார் மூன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்டது.
இந்த செயற்கை கடற்கரைக்கு அருகில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவுகளுடன் கூடிய உணவு விற்பனை வளாகமும் கட்டப்பட்டுள்ளது.