வட்டி விகிதங்கள் மேலும் குறைவடையலாம்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
தற்போது குறைக்கப்பட்டுள்ள வட்டி விகிதங்களை அடுத்த சில வாரங்களுக்குள் மீளவும் குறைக்க மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி வைப்பு மற்றும் கடன்களை கணக்கிட்டதன் பின்னர் வட்டி விகிதங்களை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட்டி விகிதங்கள் குறைவதால், கடனுக்கான வட்டியும் குறைய வேண்டும் எனத் தெரிவித்துள்ள பெர்னாண்டோ, இந்த நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.