அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகின்றன: IMFக்கு வாக்குறுதி
தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ள வாகனங்கள் தவிர அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடையை செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் நிதியமைச்சு நடத்திய கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை வாரந்தோறும் மீளாய்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 286 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு வாகனங்கள் உட்பட 930 இதர வாகனப் பொருட்களின் இறக்குமதி அமுலில் உள்ளது.
ஆனால் செப்டம்பர் முதல் வாரத்திற்குள், மீதமுள்ள பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை இரண்டு கட்டங்களாக நீக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு, வியூக திட்டப்படி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக, மின்சார வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது.