நாட்டில் அதிக விலைக்கு பொருட்களை விற்கும் அங்காடிகள் சுற்றிவளைக்கப்படும்
#SriLanka
Mugunthan Mugunthan
2 years ago
பொருட்களின் விலைகுறைப்பின் பயனை மக்களுக்கு மாற்றாத வர்த்தக அங்காடிகளை அடையாளம் காண சோதனை நடவடிக்கைகள் தொடர்வதாக நுகர்வேர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அந்த சபையின் சுற்றிவளைப்பு மற்றும் சோதனைப் பிரிவின் பணிப்பாளர் ரசல் சொய்சா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில் அதன் பயன் நுகர்வோருக்கு வழங்கப்படவேண்டும். எனினும் பிரதேச ரீதியாக மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை.
இதற்கு விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமையே பிரதான காரணமாகும். விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமையால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி அதிக விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டியவர்களாகிறார்கள் என அவர் தெரிவித்தார்.