மெக்சிகோவில் 6.4 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்

#Earthquake #Mexico #Climate
Prasu
2 years ago
மெக்சிகோவில் 6.4 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்

மெக்சிகோவில் உள்ள சிபாஸ் கடற்கரைக்கு அருகே 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் பத்து கிலோமீற்றர் ஆழத்தில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உலகளவில் இவ்வாறு அடிக்கடி இடம்பெற்றுவரும் நிலநடுக்கங்களினால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த விசேட நிலைமைகளின் போது உலக மக்களை மிகவும் அவதானமான முறையில், பாதுகாப்பாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

 குறிப்பாக நிலநடுக்கம் ஏற்பட்டால் ஒருவர் எப்பொழுதும் அமைதியாக இருக்க வேண்டும். பாதுகாப்பான இடத்தைத் தேட வேண்டும். கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல அவசரப்பட வேண்டாம் போன்ற பல பாதுகாப்பு முறைகளை உலக நாடுகள் மீண்டும் மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!