தெற்கு கடற்கரையில் பரவியுள்ள விஷ ஜந்து குறித்து எச்சரிக்கை
#SriLanka
#Fish
Prathees
2 years ago
கிழக்கு கடற்கரையில் இருந்தஜெலி என்ற மீன் இனம் தெற்கு கடற்கரையிலும் பரவியுள்ளதாக தேசிய விஷ தகவல் மையம் அறிவித்துள்ளது.
அதன் பிரதம நிபுணர் டாக்டர் ரவி ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த உயிரினம் மனித உடலில் படுவதால் ஆபத்தான நிலைமைகளை ஏற்படுத்தும். ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை இந்த மிருகத்தை கடலில் காணமுடியும் என கலாநிதி ரவி ஜயவர்தன குறிப்பிடுகின்றார்.
இந்த விலங்கு ஒரு சிறிய பலூனைப் போலவும்இ வயிற்றில் நீண்ட சரம் போன்ற சுரப்பிகளைக் கொண்டிருப்பதாகவும் மருத்துவர் குறிப்பிடுகிறார்.
இந்த விலங்கைத் தொட்டால் எப்படியோ மனிதர்கள் அலர்ஜியில் இருந்து அதிர்ச்சி நிலைக்குச் செல்லலாம்.
அதன் மூலம் நரம்பு மண்டலம்இ இதயம் மற்றும் சுவாச மண்டலம் பாதிக்கப்படும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.