பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார்
#India
#PrimeMinister
#world_news
#Breakingnews
Mani
2 years ago

இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை பிரான்ஸ் சென்றார். அங்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு போன்ற பல துறைகளில் குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தொடர்ந்து பிரான்ஸ் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இந்நிலையில், 2 நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த சந்திப்பு முழுவதும், இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.



