ஐ.நா தீர்மானங்களை மீறி மீண்டும் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா!

#world_news #NorthKorea #Missile #Lanka4
Dhushanthini K
2 years ago
ஐ.நா தீர்மானங்களை மீறி மீண்டும் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா!

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மீறி, வடகொரியா நீண்ட தூர ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்துள்ளது. 

இதற்கு அமெரிக்கா, தென்கொரியா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட குறித்த ஏவுகணையானது, 74 நிமிடங்களில்  6,000 கிமீ (3,728 மைல்) உயரத்திற்கும் 1,000 கி.மீ (621 மைல்) தூரத்திற்கும் பறந்து சென்றதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா தெரிவித்தார். 

வட கொரிய ஏவுகணையின் மிக நீண்ட விமான நேரமாக இது இருக்கும், எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஏவுகணை ஜப்பானின் மேற்கே கடலில் விழுந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்துஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி மற்றும் தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பார்க் ஜின் ஆகியோர் ஒரு கூட்டறிக்கையில், "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் தெளிவான, அப்பட்டமான மீறல் எனவும்,  அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக வடகொரியா செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும் வட கொரியா  "சட்டவிரோத மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!