ஐரோப்பா முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும் : மக்களுக்கு எச்சரிக்கை!

#world_news
Thamilini
2 years ago
ஐரோப்பா முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும் : மக்களுக்கு எச்சரிக்கை!

ஐரோப்பா முழுவதும் வெப்பநிலை உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக பிரபலமான சுற்றுலா தளங்களை தற்காலிகமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி,  இத்தாலி, சைப்ரஸ், ஸ்பெயின் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் வரலாறு காணாத வெப்பம் நிலவுகிறது, சில இத்தாலிய பகுதிகளில் வெப்பநிலை சராசரியை விட 12C (53.6F) வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

சைப்ரஸை பொருத்தவரையில்,  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் வெப்பநிலை 43C (110F) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன, மற்றும் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் ஸ்பெயினின்  சில பகுதிகளில் வெப்பநிலை 40C  எட்டும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.   தீவிர வறண்ட நிலை காரணமாக கடலோரப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படுவதற்காக அபாயம்  உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறாக ஐரோப்பா முழுவதும் வெப்பநிலை அதிகரித்து மக்கள் பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!