நாட்டில் சுகாதார அனர்த்த நிலை! தரமற்ற மருந்து நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்களா?

#SriLanka #Medicine
Mayoorikka
2 years ago
நாட்டில் சுகாதார அனர்த்த நிலை! தரமற்ற மருந்து நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்களா?

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கடன் வசதி திட்டத்தால், பெரும்பாலும், இந்தியாவிலுள்ள தரமற்ற மருந்து நிறுவனங்களுடன், இந்தக் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றிருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகளின் ஒன்றியம் இதுதொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளிக்க திட்டமிடுவதாகவும் தெரிவித்துள்ளது.

 கெனியுலா எனப்படும் ஊசி மருந்துகளை ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் மருத்துவ கருவி விஷமானதால் ஏற்பட்ட தாக்கநிலையால், பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் மரணித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

 இதேநேரம், களுபோவில போதனா வைத்தியசாலையில், கண் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 72 வயதான பெண் ஒருவர், சத்திரசிகிச்சைக்கு முன்னரான சிகிச்சைகளின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக, உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

 இதற்கு முன்னர், பேராதனை போதனா வைத்தியசாலையில், வயிற்றுவலிக்கு சிகிச்சைப் பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட 21 வயதான யுவதி ஒருவர், உயிரிழந்தார்.

 வைத்தியசாலையில் வழங்கப்பட்ட தடுப்பூசி காரணமாகவே அவர் மரணித்ததாக குறித்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். அதேநேரம், தேசிய கண் வைத்தியசாலையில், வெண்படலத்தை நீக்குவதற்கான சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளருக்கு மருந்து வழங்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பார்வைக் குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக எமது செய்திச் சேவைக்கு முன்னதாக தகவல் கிடைத்திருந்தது. இந்தநிலையில், இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோது அரச வைத்திய அதிகாரிகளின் ஒன்றியத்தின் தலைவரான வைத்தியர் ருக்ஷான் பெல்லன குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

 மருந்துகளை அருந்தி மரணிக்கும் நபர்களின் எண்ணிக்கை, நாளாந்தமும், வாராந்தமும் அதிகரிக்கிறது. இதனை தேசிய அனர்த்த நிலையாக கருதலாம். ஏனெனில், இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கடன் வசதி திட்டத்தால், பெரும்பாலும், இந்தியாவிலுள்ள தரமற்ற நிறுவனங்களுடன், இந்தக் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றிருக்கலாமோ? என்ற சந்தேகம் தற்போது எழுவதாக வைத்தியர் ருக்ஷான் பெல்லன குறிப்பிட்டுள்ளார்.

 இதனை அவசர நிலையாக கூறலாம். எனவே, அமைச்சரவையை உடனடியாக கூட்டி, இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன என்பதை தீர்மானிக்க வேண்டும். 

 இதனிடையே, அரச வைத்திய அதிகாரிகளின் ஒன்றியம், ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி, இந்திய அரசாங்கத்திற்கு கோரிக்கை கடிதம் ஒன்றை கையளிக்க திட்டமிடுவதாக அதன் தலைவரான வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

 குறித்த கோரிக்கை கடிதத்தை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிக்க திட்டமிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!