ஊசி செலுத்தப்பட்டதால் ஆபத்தான நிலையில், அனுமதிக்கப்பட்டுள்ள மற்றுமொரு பெண்!
#SriLanka
#Injection
Thamilini
2 years ago
ஊசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மற்றுமொரு பெண் ஆபத்தான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அறிய முடிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்றுவலி காரணமாக பேராதனை வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவருக்கு Ceftriaxone என்ற ஊசி செலுத்தப்பட்டது.
இதனால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அந்த பெண் உயிரிழந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த எதிர்ப்பு ஊசி அனுலாவதி என்ற மற்றொரு பெண்ணுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் தற்போது கொடிய ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.