பதவியேற்பு விழாவிற்கு பொது பணத்தை செலவிட கூடாது - ரணில் உத்தரவு!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
பொது மற்றும் தனியார் பணத்தை செலவிட்டு பதவியேற்பு விழாக்களை நடத்தக்கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நாடு பொருளாதார சீரழிவால் பாதிக்கப்பட்டு, கலவரங்கள் ஏற்பட்டு மோசமான நிலையில், பயணித்த போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளுடன் பதவியேற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஒரு வருட ஆட்சி நிறைவடையவுள்ளது.
இந்த ஒருவருட காலப்பகுதிக்குகள் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் சில இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன. இன்னும் சில பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஒருவருட பூர்த்தியை கொண்டாடும் முகமாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய ஜனாதிபதியின் நட்பு வட்டாரங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மேற்படி கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.