பேராதனையில் உயிரிழந்த யுவதியின் மரணம் குறித்து விசாரிக்க ஐவரடங்கிய குழு நியமனம்!
பேராதனை வைத்தியசாலையில், ஊசி செலுத்தியதன் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படும்21 வயதான யுவதியின் மரணம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசேட நிபுணர்கள் அடங்கிய குறித்த குழுவினர் இன்றைய தினம், (15.07) இந்த விடயம் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த யுவதிக்கு வழங்கப்பட்ட ஊசியால் அவர் உயிரிழக்கவில்லை எனவும், இந்த ஊசியை பெற்றுக்கொண்ட பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பட்டுள்ள அமைச்சர் இந்த விடயம் விஞ்ஞானப்பூர்வமாக சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வாய்ப்பாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வயிற்று வலி காரணமாக சமோதி சந்தீபனி என்ற 21 வயதுடைய யுவதி பேராதனை வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.