ரஜினிகாந்திற்கு காசு கொடுத்து இலங்கைக்கு வரவழைத்த லைக்கா?(புகைப்படம் உள்ளே)
இலங்கைக்கு சுப்பர்ஸ்ரார் ராஜனிகாந் இன்றைய தினம் வருகை தந்துள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஊடாக மாலைத்தீவுக்கு பயணம் செய்யும் வேளையிலேயே இடைமாறும் தருவாயில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்து அங்கு தங்கி பின்னர் மாலைதீவு சென்றுள்ளார்.
விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறைக்கு நடிகர் ரஜினிகாந்த் அழைத்துச்செல்லப்பட்டு, அவருக்கு சிறப்பான வரவேற்பை சிறிலங்கா எயர்லைஸ் நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.
இதேவேளை ராஜனிகாந் இலங்கைக்கு முதன்முறையாக வந்துள்ளார். இதுவரை காலத்திலும் இலங்கையை பற்றியும் இலங்கை தமிழர்கள் பற்றியும் எதுவுமே பேசாமல் இருந்து வந்தார்.
இலங்கையில் போர் நடைபெற்ற சூழலில் நடிகர் சங்கத்தினரால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட அடையாள உண்ணாவிரதத்தின் போது அதில் பங்குபெற்றாமல் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார்.
அதேபோல் ரஜனிகாந்த் இன்று இலங்கை வந்துள்ளமை இலங்கைக்காகவோ இலங்கை மக்களுக்காகவோ வரவில்லை. இருந்தும் ரஜினிகாந்த் தன்வாழ்நாளில் ஒருமுறையாவது இலங்கைக்கு வருகைதர வேண்டுமென அளவுகடந்த விருப்பத்தை கொண்டிருந்தார் என அவருடைய நெருங்கிய வட்டரங்கள் தெரிவித்திருந்தன.
இது இவ்வாறுஇருக்க ஏற்கனவே லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட 150 புதிய வீடுகளை பயனாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்வதற்காக இலங்கைவர இருந்த நிலையில் அது கை கூடவில்லை. எனினும் இலங்கையில் இருந்து பல பிரமுகர்கள் ராஜனிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதர் டி.வெங்கடேஷ்வரன் ராஜனிகாந்தை சந்தித்து இந்தியாவுக்கான இலங்கையின் சுற்றுலாத்துறை தூதராக செயல்படவும், இலங்கைக்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்திருந்தமையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
எவ்வாறாயினும் இலங்கைக்கு ரஜனிகாந்த் வருவதன் மூலம் சுற்றுலாத் துறையை மேலும் வளப்படுத்த முடியும் எனவும் நம்பப்படுகின்றது. இதன் ஒரு ஆரம்பப்புள்ளியாக ராஜனிகாந்த்தின் இன்றைய கட்டுநாயக்கவின் விஜயம் அமையும் என்பதும் ஐயம் இல்லை.