ஆடிப்பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தால முற்றம்!
#SriLanka
#Jaffna
Mayoorikka
2 years ago
ஆடிப்பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தால முற்றம் பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறுகின்றது.
நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்றிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வரை இக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை, தென்னை வள அபிவிருத்தி சங்கங்கள் இணைந்து குறித்த கண்காட்சியினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதில் பனை சார்ந்த ஏராளமான உள்ளூர் உற்பத்திகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
குறித்த கண்காட்சியை ஏராளமான மக்கள் பார்வையிட்டு பனைசார் உற்பத்தி பொருட்களை வாங்கிச் செல்வதினை அவதானிக்க முடிகின்றது.






