முல்லைத்தீவில் 21 சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்!

#SriLanka #government #Mullaitivu
முல்லைத்தீவில் 21 சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சியினை முடித்த 21 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு பயிற்சியினை நிறைவு செய்த 21 பேருக்கு சுகாதார பணியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. 

நியமனம் வழங்கும் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மாவட்ட பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் லிங்கேஸ்வரன், மாவட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!