இன்று சந்திரயான்-3 விண்ணில் பாய்கிறது பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை
#India
#Fisherman
#Tamilnews
#Breakingnews
#Rocket
Mani
2 years ago

சந்திரயான்-3 ராக்கெட் இன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கு தேவையான அனைத்து பணிகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முடித்துள்ளதோடு, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு அருகில் அமைந்துள்ள பழவேற்காடு கடல் உள்ளது. வழக்கமாக பழவேற்காட்டை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் இந்த கடல் பகுதியில் மீன்பிடிப்பது வழக்கம். இந்நிலையில் இன்று சந்திரயான்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழவேற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் இதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ளார்.



