ரஷ்ய வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட பில்லியன் கணக்கான பணம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக வாக்னர் படையினர் நடத்திய கிளிர்ச்சியின் போது ரஷ்ய வங்கிகளில் இருந்து 1.1 பில்லியன் பணம் எடுக்கப்பட்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த ஜுன் மாதம் ரஷ்யாவின் மத்திய வங்கியில் இருந்து 500 பில்லியன் ரூபிள்கள் எடுக்கப்படதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், ஐந்தில் ஒரு பகுதி தொகை வாக்னர் படையினர் மேற்கொண்ட கிளர்ச்சியின்போது எடுக்கப்பட்டது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்ததை தொடர்ந்து மேற்கத்தேய நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்தன.
அத்துடன், ரஷ்யாவில் செயற்பட்ட பல முன்னணி நிறுவனங்கள் நாட்டில் இருந்து வெளியேறின. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
இருப்பினும் ரஷ்யா டொலருக்கு பதிலாக தனது நாணய அலகான ரூபிளை பயன்படுத்தி வர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொருளாதார வீழ்ச்சியை சமாளித்திருந்தது.



