திருக் குர்ஆன் எரிப்பு : மத தடை அல்லது வெறுப்புக்கு எதிராக சட்டம் இயற்றப்படல் வேண்டும் - ஐ.நா மனித உரிமை

#world_news
திருக் குர்ஆன் எரிப்பு : மத தடை அல்லது வெறுப்புக்கு எதிராக சட்டம் இயற்றப்படல் வேண்டும் - ஐ.நா மனித உரிமை

இஸ்லாமியர்களின் புனித நுாலான குர் ஆனை அவமதிக்கும் வகையில் அது எரியுட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமையகத்தில் பாகிஸ்தானினால் கொண்டு வரப்பட்ட வரைவுத்தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

 47 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தத் தீா்மானத்துக்கு இந்தியா, வங்கதேசம், சீனா, கியூபா, மலேசியா, மாலத்தீவு, கத்தாா், உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 28 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

 அமெரிக்கா, பிரிட்டன், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜொ்மனி, பெல்ஜியம் உள்பட 12 நாடுகள் எதிராக வாக்களித்தன.

 இந்த வாக்கெடுப்பை 7 நாடுகள் புறக்கணித்தன.

 வன்முறையைத் தூண்டும் வகையில் மத வெறுப்புக்குக் காரணமான செயல்பாடுகளைத் தடுக்கவும், அவற்றுக்கு எதிரான நடவடிக்கைக்கு தடையாக உள்ளவற்றை அடையாளம் காணும் வகையில் உறுப்பு நாடுகள் தங்களது சட்டங்கள், கொள்கைகள், சட்ட அமலாக்கத்தை ஆராய வேண்டும் எனவும் அந்தத் தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 இது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையா் வோல்கா் தூா்க் கூறுகையில், ‘கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்துள்ள திருக் குரானை எரித்த சம்பவத்தையடுத்து இந்தத் தீா்மானம் விவாதிக்கப்பட்டுள்ளது. 

மக்களிடையே பிளவை ஏற்படுத்தவும் கோபத்தை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டும் வகையிலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன’ என்றாா்.

 ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் கடந்த மாதம் பக்ரீத் பண்டிகையையொட்டி அரசின் அனுமதியுடன் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அங்குள்ள மசூதிக்கு வெளியே இராக் நாட்டைச் சோ்ந்த கிறிஸ்தவா் ஒருவா் திருக் குரானை தீயிட்டு எரித்தாா்.

இச்சம்பவத்திற்கு இஸ்லாமிய நாடுகளின் கடும் கண்டத்தினையடுத்து ஐ.நா.வில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!