தோட்ட முகாமையாளருடன் இணைந்து இராணுவம் மலையக கலைஞர்களை அச்சுறுத்துகிறது

#SriLanka
Mayoorikka
2 years ago
தோட்ட முகாமையாளருடன் இணைந்து இராணுவம் மலையக கலைஞர்களை அச்சுறுத்துகிறது

மலையக தமிழ் மக்களின் கலாசார நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை இராணுவம் மற்றும் தோட்ட நிர்வாகமும் ஆராய்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.

 ஜூலை 09 ஆம் திகதி மாலை பொகவந்தலாவ, கொட்டியாகல பிரதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த “லயத்து கோழிகள்” நாடகம் தொடர்பில் தோட்ட நிர்வாகமும், இராணுவமும் பல தடவைகள் கேள்வி எழுப்பியதோடு, இராணுவம் நாடகத்தின் இயக்குனருக்கு தொலைபேசி அழைப்பையும் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளது.

 மலையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட நாடகக் கலைஞரான இராசையா லோகநாதனால் இயக்கப்பட்ட நாடகம் 'லயத்துக் கோழிகள்'. கொட்டியாகலை தோட்ட நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர், தனது பிரதேசத்தில் நாடகங்கள் நடத்தப்பட்டால், எழுத்து மூலம் தமக்கு அறிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 பொலிஸாருக்கு அறிவிப்போம் “எங்கள் பகுதியில் நீங்கள் நிகழ்ச்சி நடத்தினால், கடிதம் மூலம் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், அவசரநிலை ஏற்பட்டால், நாங்கள் பாதிக்கப்படலாம்.

 தோட்டத் தலைவர் மூலம் நாடகங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறான அறிவித்தலின் பின்னர் பொகவந்தலாவை பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவிப்போம்."

 இந்த நாடகம் தொடர்பில் இராணுவம் விசாரணைகளை மேற்கொண்டதை ஒப்புக்கொண்ட கொட்டியாகலை தோட்ட நிர்வாகம், இராணுவத்திற்கு தகவல்களை வழங்கியதையும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளது. “இந்த நாடகம் பற்றிய தகவல்களைக் கேட்டனர். 

இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது, இராணுவத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என, சிரேஷ்ட தோட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாடகக் கலைஞர் ராசையா லோகநாதன் குறிப்பிடுகின்ற வகையில், மவுஸாகலை இராணுவத் தலைமையகத்தைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்தி கதைத்தவர், “என்னுடைய அடையாள அட்டை இலக்கத்தை குறிப்பிட்டு கதைத்தமையால், அவருக்கு என்னுடைய அடையாள அட்டை இலக்கம் எப்படி கிடைத்தது.” என்ற அச்சமும் தனக்கு ஏற்பட்டுள்ளதாக நாடகக் கலைஞர் தெரிவிக்கின்றார்.

 இந்த நாடகம் தொடர்பில் கொட்டியாகலை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடம் தெரிவிக்கும் போது, நாடக கலைஞர் வழங்கிய தனிப்பட்ட தகவலையே அந்த அதிகாரி இராணுவத்திற்கு வழங்கியதாக சந்தேகம் எழுந்துள்ளது.

images/content-image/2023/07/1689229871.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!