சத்திரசிகிச்சைகளை நேரடியாக ஒளிபரப்பிய வைத்திய நிபுணருக்கு நேர்ந்த கதி!

ஆபத்தான அறுவை சிகிச்சைகளை நேரலையில் ஒளிபரப்பியதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் கேத்தரின் ரோக்ஸான் கிரேவின் உரிமத்தை ஓஹியோ மருத்துவ வாரியம் நிரந்தரமாக இரத்து செய்துள்ளது.
யூடியூப்பில் ஆபத்தான அறுவை சிகிச்சைகளை நேரடியாக ஒளிபரப்பியமைக்காக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வைத்தியர் கேத்தரின் ரோக்ஸான் தன்னுடைய தவறுக்காக மன்னிப்பு கோரினார்.
எனது சமூக ஊடக நடைமுறைகளை மாற்ற நான் தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ள அவர், நான் ஒருபோதும் அறுவை சிகிச்சையை நேரலையில் ஒளிபரப்ப மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்..
சத்திரசிகிச்சைகளை நேரடியாக ஒளிபரப்ப அவர் அனுமதி கோரியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இருப்பினும் நான்கு பெண்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக முறைப்பாடு அளித்துள்ளனர்.



