கண்டம் விட்டு கண்டம் பாயும் பால்ஸ்டிக் ஏவுகணையை பரிசோதனை செய்த வடகொரியா!

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் Hwasong-18 என்ற ஏவுகணையை நேற்று (புதன்கிழமை) ஏவியுள்ளது. இதனை அந்நாட்டின் அதிபரான கிம்ஜோங் உன் பார்வையிட்டுள்ளார்.
Hwasong-18 போரின்போது ஏவுகணைகளை வேகமாக நிலைநிறுத்த அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனையில் இந்த Hwasong-18 என்ற ஏவுகணை நீண்ட நேரத்தை எடுத்துக்கொண்டதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டம் தெரிவித்துள்ளன.
இதேவைளை அண்மைக்காலமாக கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்துவதன் மூலமும், தென் கொரியா நட்பு நாடுகளுடன் அணு ஆயுதப் போர் திட்டமிடல் செய்வதன் மூலமும் பதற்றங்களை அதிகரிப்பதாக வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் எனவும் வடகொரியா முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



