கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீது சந்தேகம்! வெடித்த போராட்டம்

#SriLanka #Protest #Mullaitivu
Mayoorikka
2 years ago
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீது சந்தேகம்! வெடித்த போராட்டம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சர்வதேச நியமங்களுக்கு அமைய அகழப்பட வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (12) முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

 முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 17ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 2500 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

 குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது உறவுகளை தேடி வருகின்ற நிலையில், அண்மையில் கண்டறியப்பட்ட மனித புதைகுழி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

 இதனால், அதன் அகழ்வு பணிகள் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் இடம்பெற வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரியுள்ளனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!