8 கிலோ தங்கத்துடன் இருவர் கைது!
#SriLanka
#Arrest
Prathees
2 years ago
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக எடுத்துச் செல்ல முற்பட்ட 08 கிலோ 450 கிராம் தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்னிமுந்தலம் குளம் பகுதியில் கடற்படையினர் இன்று (12) காலை விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
அங்கு கல்பிட்டி கடற்பகுதியை நோக்கி சந்தேகத்திற்கிடமான வகையில் படகு ஒன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்து சோதனையிட்டனர்.
டிங்கி படகில் கவனமாக மறைத்து சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு பொதிகளில் பொதி செய்யப்பட்ட தங்கம் கடற்படையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கல்பிட்டி மண்டலக்குடா பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 42 வயதுடையவர்களாவர்.