சில பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கைகள்!
#SriLanka
#Import
Prathees
2 years ago
மேலும் 300 அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் டுவிட்டரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அந்த 300 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த வாரம் முதல் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்று 306.15 ருபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 320,68 ருபாவாக பதிவாகியுள்ளது.